பட்மின்ரன் : சாய்னா நேவால் வெற்றி!
Saturday, August 4th, 2018
24ஆவது உலக பட்மின்ரன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் இடம்பெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3ஆவது சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் சாய்னா நேவால் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள அவர், 4ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் ரொட்சனோக் இன்டானோனை எதிர் கொண்டு வெற்றி பெற்றார்.
இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் இந்திய சார்பில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து 21:10, 21:18 என்ற நேர் செட் கணக்கில் தென்கொரியாவின் சுங் ஜி யென்னை வெற்றிகொண்டார்.
இந்த வெற்றியின் மூலம் அவர் காலிறுதிக்கான தகுதியை பெற்றார்.
Related posts:
கோஹ்லி 200: வலுவான நிலையில் இந்தியா!
டோனியின் சாதனையை முறியடித்த டி கொக்!
தடளகட வீரர் பிஸ்டோரியஸிற்கு மாரடைப்பு?
|
|
|


