பங்களாதேஷ் பிரிமியர் லீக் – குசல் மற்றும் திசர பெரேராவுக்கு வாய்ப்பு!
Friday, July 21st, 2017
பங்களாதேஷ் பிரிமியர் லீக் ரி–ருவென்ரி தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களான குசல் பெரேரா, திசர பெரேரா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 5வது பங்களாதேஷ் பிரிமியர் லீக் ரி–ருவென்ரி தொடரில், ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாட இவ் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதனை அந்த அணியின் உரிமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, இந்த தொடரில் ஏற்கனவே டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக விளையாடிவரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ஒப்பந்தமாகிய அணிக்கு அசேல குணரட்ன மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரு முக்கிய வீரர்களுக்கு ஐ.சி.சி அபராதம்!
நியூசிலாந்தின் அதிரடி வீரர் ஓய்வு !
குசல் மெண்டிஸிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை!
|
|
|


