பங்களாதேஷ் ஆற்றில் ரொஹிங்கிய படகு மூழ்கியதில் பலரும் மாயம்!

பதற்றம் கொண்ட மியன்மாரில் இருந்து பங்களாதேஷுக்கு தப்பிச்செல்ல முயன்றபோது ரொஹிங்கியா முஸ்லிம்கள் சென்ற படகொன்று ஆற்றில் மூழ்கியதில் பலர் காணாமல்போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
படகில் இருந்த பெண் ஒருவரை பங்களாதேஷ் மீனவர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை மீட்டுள்ளார். குறித்த படகில் அளவுக்கு அதிகமானவர்கள் இருந்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். மியன்மார் இராணுவ இயந்திரப் படகொன்று துரத்திவந்ததை அடுத்தே நாப் ஆற்றில் படகு மூழ்கியுள்ளது.
அந்த படகில் இருந்த ஏனையோருக்கு என்ன ஆனது என்பது குறித்து அந்த பெண் அறியாமல் உள்ளார். எனினும் 13 பெண்கள் மற்றும் குழந்தையின் சடலங்கள் துப்பாக்கி காயங்களுடன் நாப் ஆற்றின் மியன்மார் கரையில் ஒதுங்கி இருப்பதாக ரொஹிங்கியா வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த தகவல் சுயாதீனமாக உறுதி செய்யப்படாத நிலையில் இதுபற்றி எதுவும் அறியவில்லை என்று பங்களாதேஷ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேற்கு ரகினே மாநிலத்தில் கடந்த ஒக்டோபரில் இராணுவம் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக சுமார் 30,000 ரொஹிங்கியாக்கள் வெளியேற்றப்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|