பங்களாதேஷ் அணியுடனான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் – இலங்கை அணி வெற்றி!
Tuesday, March 5th, 2024
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இந்து 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, சதீர சமரவிக்ரம 61 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் ரிஷாத் ஹொசைன் 32 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக ஜாக்கர் அலி 68 ஓட்டங்களையும், மஹ்முதுல்லாஹ் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் அஞ்சலோ மெத்யூஸ் 17 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


