பங்களாதேஷ் அணிக்கு திரும்பினார் அல் ஹொஸைன்!

Tuesday, October 4th, 2016

இங்கிலாந்துடனான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளுக்குமான பங்களாதேஷ் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் அமீன் அல் ஹொஸைன் அழைக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானுக்கு எதிராக 2 – 1 என தொடர் வெற்றியை பெற்ற பங்களாதேஷ் அணியில் இருந்து 26 வயது அமீன் நீக்கப்பட்டிருந்தார். பந்து வீச்சு முறை அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து கடந்த செப்டெம்பரில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹமதும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பங்களாதேஷில் வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள இந்த ஒருநாள் தொடருக்கு முன்னர் இங்கிலாந்து அணி ஒரே ஒரு பயிற்சி போட்டியில் நேற்று விளையாடியது.

எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானுடனான ஒருநாள் தொடரின்போது மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய சுழற்பந்து வீச்சாளர் முஷர்ரப் ஹொஸைனும் பங்களாதேஷ் அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

34 வயதான முஷர்ரப், ஆப்கானுடனான கடைசி ஒருநாள் போட்டியில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 141 ஓட்டங்களால் வென்றது.

பங்களாதேஷ் அணி: மஷ்ரபி மோர்தசா (தலைவர்), ஷகீப் அல் ஹஸன், தமீம் இக்பால், சவும்யா சாகர், இம்ருல் கைஸ், மொசத்தக் ஹொஸைன், மஹ்மூதுல்லாஹ், நஸிர் ஹொஸைன், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் காப்பாளர்), சப்பிர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், முஷர்ரப் ஹொஸைன், அல் அமீன் ஹொஸைன், தஸ்கின் அஹமது.

coltkn-10-04-fr-10152803247_4842043_03102016_mss

Related posts: