பங்களாதேஷ் அணிக்கு எதிரான 20 – 20 தொடரை வென்றது இலங்கை !
Sunday, March 10th, 2024
இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 – 20 போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 இக்கு 1 என்ற கணக்கில் இலங்கை வெற்றிகொண்டுள்ளது.
சில்ஹெட்டில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ஓட்டங்களை பெற்றது
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிக பட்சமாக குசல் மென்டிஸ் 86 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் ரஷ்ஹிம் அகமட் மற்றும் ரிஷாட் குஷைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
175 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் அதிக பட்சமாக Rishad ரிஷாட் குஷைன் 53 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சுவான் துஷார 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேவேளை சுவான் துஷார இன்றைய போட்டியில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிட்டதக்கது.
000
Related posts:
|
|
|


