நிலைகுலைந்தது இங்கிலாந்து அணி!
Thursday, August 4th, 2016
பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தலைவர் மிஸ்பாஉல்ஹக் முதலில் பந்துவீச தீர்மானித்தார். தொடக்க துடுப்பாட்டக்காரர்களாக இங்கிலாந்து அணியின் தலைவர் குக் மற்றும் அலெக்ஸ்ஹெல்ஸ் இறங்கினர். இவர்கள் இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
முதல் விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹேல்ஸ் 17 ஓட்டங்கள் எடுத்த போது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோகைல்கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரூட்(3) மற்றும் வின்ஸ்(39) சோகைல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் இரட்டை இலக்கம் தாண்டுவதற்குள் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியில் சிறப்பாக ஆடிய பேலன்ஸ்(70) யாசிர்ஷா பந்து வீச்சிலும், மோயின் அலி (63) அமிர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 297 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் சோகைல்கான் 5 விக்கெட்டும், அமிர் மற்றும் ராகட் அலி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இவ்விரு அணிகள் மோதிய 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 1 வெற்றியும், பாகிஸ்தான் அணி 1 வெற்றியும் பெற்று சம நிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொடரை வென்றது இந்தியா!
டெஸ்ட் தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு!
மாகாண கிரிக்கெட் தொடர் - முதல் சுற்றின் இறுதி போட்டிகளில் இரண்டு இன்று!
|
|
|


