நிரோசன் திக்வெல்லவுக்கு உபாதை!

இலங்கை கிரிக்கட் அணியின் விக்கட் காப்பாளர் நிரோசன் திக்வெல்ல உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் திக்வெல்ல பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுகிழமை பயிற்சியின் போது இடது கையில் ஏற்பட்டுள்ள உபாதையானது சிறிய உபாதை என்ற போதிலும் குணமடைய சில வாரங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில வேளைகளில் திக்வெல்ல எதிர்வரும் இருபதுக்கு 20 போட்டித் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
நுழைவுச் சீட்டு முறைகேடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் விடுவிப்பு!
இலங்கை - சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!
ஊக்கமருந்துச் சோதனை செய்யாததால் திருப்பி அனுப்பப்பட்டது இலங்கை அணி!
|
|