நாளைய இருபதுக்கு20 போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் விலகல்!
Monday, September 5th, 2016
உபாதை காரணமாக அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் இலங்கை அணியுடன் நாளை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலிய அணியின் ஆரோன்ச் பின்ச் மற்றும் கிறிஸ் லீன் ஆகியோரே இவ்வாறு உபாதைக்கு உள்ளாகியுள்ளனர். பின்ச் நேற்றைய(04) போட்டியில் உபாதைக்கு உள்ளாகியதனை அடுத்து கிறிஸ் லீன் பயிற்சியின் போது, உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.இருதரப்பினருக்கு இடையிலான முதல் இருபதுக்கு20 போட்டியானது நாளை(06) நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Related posts:
மாலிங்க தொடர்பில் சச்சின் புகழாரம்!
திட்டமிட்டு நடாத்தப்பட்ட விபத்தா? பாதுகாப்பான நிலையில் இங்கிலாந்து அவுஸ்திரேலிய வீரர்கள்!
இந்திய அணி வெற்றி !
|
|
|


