நட்சத்திர வீரர் நடால் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகல்!
Saturday, March 3rd, 2018
மெக்சிகன் டென்னிஸ் போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் நடால் காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவுஸ்ரேலியாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் காலிறுதியில் காயம் காரணமாக ஸ்பெயின் நாட்டு வீரர் நடால் விலகியுள்ளார். இப் போட்டியின் போது இடுப்புபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் விளையாடுவதைத் தவிர்த்துள்ளார்.
இந்நிலையில் மெக்சிகன் திறந்த டென்னிஸ் போட்டியில் தற்போது காயம் குணமடைந்ததால் பங்குபற்ற முடிவு செய்துள்ளார். இதற்கமைய சக நாட்டு வீரரான லோபசுடன் முதலாவது சுற்றில்மோதவிருந்த நிலையில், பயிற்சியின் போது மீண்டும் காயம் அடைந்துள்ளதால், நடால் மெக்சிகன் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.
Related posts:
கே.சி.சி.சி. வெற்றிக்கிண்ணம் காலிறுதியில் பரீஸ் அணி!
2019 ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் அணி!
9 பேர் டக்-அவுட் : அணியின் ஓட்டங்கள் 6 - கிரிக்கெற் வரலாற்றில் மோசமான சாதனை
|
|
|


