தோல்வி குறித்து மனந்திறந்த உபுல் தரங்க!

இலங்கை அணி தோல்வி பாதையில் வீழ்ந்துள்ள நிலையில், அணியின் தலைமையை வேரொருவர் மீது சுமத்தி விட்டுச் செல்ல தாம் எண்ணவில்லை என இலங்கை கிரிக்கட் அணித்தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இறுதி போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் அணியுடன் தொடர் தோல்விக்கு இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களே காரணம்.
தொடரில் தாம் உள்ளிட்ட மூவர் மாத்திரமே 75 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதாக அவர் கூறியுள்ளார்.எனினும், இலங்கை அணி பாகிஸ்தானுடன் தொடரை முற்றாக இழந்துள்ளமைக்கு தாம் உள்ளிட்ட அணி வீரர்களே முழு பொறுப்பு என அணித்தலைவர் உபுல் தரங்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
முதல் நாள் ஆட்டத்தில் இலங்கையை தடுமாறவைத்த தென் ஆப்பிரிக்கா!
இலங்கை இந்திய தொடர் : துடுப்பெடுத்தாடுகிறது இந்தியா!
உலகின் மிகபெரிய கிரிக்கெட் மைதானம் !
|
|