தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்து நியூசிலாந்து வீராங்கனை சாதனை!

Tuesday, February 28th, 2017

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வீராங்கனை எமி சட்டர்த்வைட் (amy satterthwaite) ஒருநாள் போட்டியில் தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

நியூசிலாந்து – அவுஸ்ரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி, ஆக்லாந்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 275 ஓட்டங்களை பெற்றது. இந்த அணியின் ஆரம்ப வீராங்கனை பெத் மூனே, அணிக்காக 100 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பின்னர் 276 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இதில் நியூசிலாந்து அணியின் வீராங்கனை எமி சட்டர்த்வைட் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 49.1 ஓவர்களில் 276 ஓட்டங்களை பெற்று ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இப் போட்டியில் சதம் பெற்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை எமி சட்டர்த்வைட் பெற்றுள்ளார். இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் எமி சட்டர்த்வைட் தொடர்ச்சியாக 137 , 115 மற்றும் 123 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

amy-test-profile

Related posts: