தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் யாழ் பல்கலை மாணவர்கள் சாதனை!

Wednesday, July 25th, 2018

தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டிகளில் யாழ் பல்கலைக்கழகத்தின் கலை, தொழில்நுட்ப மற்றும்  விவசாய பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் ங0 பேருக்கே இந்தப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான குமித்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்கள் ஜெயப்பிரியா (வெள்ளிப் பதக்கம்), கிருசிகா (வெள்ளிப்பதக்கம்), நிமேசா (வெள்ளிப்பதக்கம்), ரசிந்திரா (வெள்ளிப்பதக்கம்), மரிக்கார் (வெண்கலப் பதக்கம்), திசுரி நிமேஷா (வெண்கலப் பதக்கம்), சந்தமாலி (வெண்கலப் பதக்கம்), கந்சனி ( வெண்கலப் பதக்கம்), கெட்டி ஆராச்சி (வெண்கலப் பதக்கம்), புஷ்பகலா (வெண்கலப் பதக்கம்).

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கராத்தே பயிற்சிகளை பொறியியலாளர் சென்சை றொஷ்ஹரித் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: