தென்னாபிரிக்காவை வென்றது இந்தியா!
Thursday, June 6th, 2019
12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 8 ஆவது போட்டியாக இடம்பெற்ற ஆட்டத்தில், இந்திய அணி, தென்னாபிரிக்க அணியை 6 விக்கட்டுக்களினால் வெற்றிகொண்டது.
சவுத்தம்ப்டனில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 228 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 47.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இந்திய அணி சார்பில் ரோஹிட் சர்மா ஆட்டமிழக்காமல் 122 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.
இந்தத் தோல்வியின் மூலம், தென்னாபிரிக்க அணி, இதுவரை இடம்பெற்ற 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
Related posts:
ஆஷஸ்ஸில் சூதாட்டமா? ஐ.சி.சி விளக்கம்!
அவுஸ்திரேலியாவுடன் இன்று மோதவுள்ள இலங்கை அணி வீரர்கள்!
இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இலங்கையை வென்றது ஆப்கா...
|
|
|


