தென்ஆப்பிரிக்காவை விழிபிதுங்க வைத்த அவுஸ்திரேலியா!

Monday, March 7th, 2016
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா 5 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில், தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. இரண்டாவது போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்கா முதலில் களமிறங்கி விளையாடியது.
தொடக்க வீரர்களாக டிவில்லியர்ஸ், டி காக் களமிறங்கினர். டிவில்லியர்ஸ் 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, டி காக் அதிரடியாக விளையாடி 44 ஓட்டங்கள் சேர்த்தார்.
பின்னர் வந்த டுமினி (14) நிலைக்கவில்லை. மில்லர் 2 பவுண்டரி, 2 சிக்சர் என 18 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்தார். அதிரடியில் மிரட்டிய டுபிளசி 41 பந்தில் 79 ஓட்டங்கள் (5 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார்.
இதனால் தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட்டுக்கு 204 ஓட்டங்களை குவித்தது. அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜேம்ஸ் பால்க்னர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் அவுஸ்திரேலியா களமிறங்கியது.
தொடக்க ஆட்டகாரர்களான வாட்சனும், பின்ஞ்சும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். இதன் பின்னர் வந்த வர்னரும், மேக்ஸ்வேல்லும் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.
வார்னர் 40 பந்தில் 77 ஓட்டங்களும் (6 பவுண்டரி, 5 சிக்சர்), மேக்ஸ்வெல் 43 பந்தில் 75 ஓட்டங்களும் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.
கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தில் மிட்செல் மார்ஷ் 2 ஓட்டங்கள் எடுக்க, அவுஸ்திரேலியா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய 3 போட்டிகள் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. கடைசி மற்றும் 3வது டி20 போட்டி எதிர்வரும் 9ம் திகதி கேப் டவுனில் நடக்கிறது

Related posts: