துரத்துகிறது துரதிஸ்டம்: மீண்டும் தென்னாபிரிக்கா தோல்வி!

Monday, June 24th, 2019

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக ஹரிஸ் சோஹைல் 89 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்

பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி சார்பாக பப் டூ பிளசிஸ் அதிகபட்சமாக 63 ஓட்டங்களை பெற்று கொடுத்துள்ளார்.

Related posts: