தினேஸ் சந்திமால் விலகல்!
Tuesday, September 11th, 2018
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணியின் பிரபல வீரர் தினேஸ் சந்திமால் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அவரின் விரலில் ஏற்பட்டுள்ள காயம் இதற்கு காரணமாகும்.
இந்த போட்டித்தொருக்காக 16 பேர் கொண்ட குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் தினேஸ் சந்திமாலும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தனது மனைவி குழந்தை பிரசவிக்கவுள்ளதால் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது சுற்றில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவும் விலகியுள்ளார்.ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் எதிர்வரும் 15 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
முத்தரப்பு கிரிக்கெட்: முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வெற்றி!
23 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன !
செரீனா வில்லியம்ஸ்க்கு அபராதம்!
|
|
|


