தாய்லாந்தில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள்!

Saturday, August 3rd, 2019

ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் இடம்பெற்ற 06 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் இரு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

தாய்லாந்து நாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான ஆசியான் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தாய்லாந்தில் இரு இடங்களில் சிறிய ரக குண்டுகள் வெடித்ததில் 2 பெண்கள் காயம் அடைந்துள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

Related posts: