தரவரிசையில் பி.வி.சிந்து முன்னேற்றம்!

சீன ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்த பி.வி.சிந்து பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்து இந்த ஆண்டு சீன ஓபனை வென்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஹாங்காங் ஓபன் போட்டியிலும் 2வது இடத்தை பிடித்தார்.
இந்த நிலையில் சர்வதேச பேட்மிண்டன் சம்மேளம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் பி.வி.சிந்து 2 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார்.மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் 10வது இடத்தில் உள்ளார்.
Related posts:
போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டில்ஷான்?
மாலிங்க-குலசேகர சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து கருத்து!
வாய்ப்பு மறுப்பு: கனடாவில் களமிறங்கும் மாலிங்க!
|
|