மாலிங்க-குலசேகர சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து கருத்து!

Wednesday, April 12th, 2017

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதி T20 போட்டியில் மூன்று விக்கெட்களை கைப்பற்றி லசித் மாலிங்க ஹெட்ரிக் சாதனை படைத்திருந்தார்.

இது குறித்து மாலிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தான் வீசிய முதல் மூன்று ஓவர்களிலும் விக்கெட்களை கைப்பற்ற முடியாது போனது, எனினும் இறுதி ஓவர்களில் ஹெட்ரிக் சாதனை படைத்தது பெரும் மகிழ்ச்சியே என தெரிவித்திருந்தார்.

மேலும், தானும் நுவன் குலசேகரவும் ஒரே நாளில் கிரிக்கெட் வாழ்வுக்கு ஓய்வு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் மாலிங்க கூறியிருந்தார்.

“எனக்கு தேவைப்பட்டது முதல் மூன்று ஓவர்களில் விக்கெட்களை கைப்பற்றவே, என்றாலும் அது முடியாது போனது. எவ்வாறாயினும் எனது முயற்சியினையும், வித்தைகளையும் பயன்படுத்தி ஹெட்ரிக் சாதனையினை பெற்றேன். என்றாலும், இறுதிப் போட்டியில் தோற்றது பெரும் கவலையே.. இன்னும் நான் பழைய பாணியில் பந்து வீசவில்லை. ஏனெனில் காலில் ஏற்பட்ட உபாதை நூற்றுக்கு நூறு வீதம் முழுமையாக சுகமாகவில்லை. வலி நிவாரணி எடுத்துத் தான் விளையாடுகிறேன். என்றாலும், நான் சுமார் ஒரு வருட காலம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வில் இருந்தேன்.. பந்து வீசும் முறைமைகளை எனது பழைய காணொளி மூலம் பார்த்து பயிற்சி பெற்றேன். நான் நினைக்கவில்லை எனது உபாதை நிலையில் நீண்ட இன்னிங்ஸ்களைக் கொண்ட போட்டிகளில் விளையாட முடியும் என்று.

எனது நோக்கம் திறமை உள்ளவரை விளையாடி கிரிக்கெட் வாழ்வுக்கு ஓய்வினை வழங்குவதே. சிலசமயம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு ஒன்றாகவே வந்த நானும்,குலசேகரவும் ஒரே நாளில் ஓய்வினை அறிவிக்கலாம்.. ” எனவும் மாலிங்க மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts: