தனி நாடான பின் ஒலிம்பிக்கில் பங்கேற்ற கோசாவோவுக்கு தங்கம்!

Monday, August 8th, 2016

செர்பியாவில் இருந்து பிரிந்து தனிநாடான பின்னர் முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற கொசாவோவுக்கு 52 கிலோ ஜூடோ போட்டியில் முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

யூகோஸ்லேவியாவுடன் இணைந்திருந்தது ஒரு பகுதி கொசாவோ. யூகோஸ்லேவியா உடைந்த போது கொசாவோவை செர்பியா தனது நாட்டின் ஒரு அங்கமாக்கிக் கொண்டது. இதை ஏற்க மறுத்து கொசாவோ அல்பேனியர்கள் தனிநாட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ஐநா தலையிட 2008-ம் ஆண்டு கொசாவோ தனிநாடாக பிரகடனம் செய்யப்பட்டது. சர்வதேச சமூகமும் இதை அங்கீகரித்தது.

தனிநாடான பின்னர் முதல் முறையாக நடப்பு ரியோ ஒலிம்பிக்ஸில் கொசாவோ பங்கேற்றுள்ளது. இதில் 52 கிலோ பிரிவு ஜூடோ போட்டியில் அந்த நாட்டின் வீராங்கனை கெல்மண்டி தங்கப் பதக்கம் வென்றார்.

தங்கப் பதக்கம் வென்ற கெல்மண்டி ஆனந்தக் கண்ணீருடன், இந்த நாளுக்காகத்தான் 4 ஆண்டுகள் காத்திருந்தேன் என கூறினார். தனிநாடான பின்னர் ஒலிம்பிக்கில் முதல் முறையாக பங்கேற்று முதல் தங்கப் பதக்கத்தை பெற்றிருப்பதை கொசாவே நாடே கொண்டாடிவருகிறது.

Related posts: