தனது ஓய்வு பற்றி மனம் திறந்தார் விராட் கோலி!.

Saturday, May 18th, 2024

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி தனது ஓய்வு பற்றி மனம் திறந்துள்ளார்.

ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என அண்மையில் அவர் வழங்கிய செவ்வியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும் என்ற பசியுடன் இருப்பதற்கான காரணம் மிகவும் எளிமையானது.

ஒரு விளையாட்டு வீரராக எங்கள் அனைவருக்கும் ஓய்வு காலம் என்பது நிச்சயம்.  அதனால் நான் அதனை நோக்கி வேலை செய்கிறேன்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த நாளில் இப்படி விளையாடி இருக்கலாம் என்ற சிந்தனையுடன் ஓய்வு பெற வேண்டும் என்று விரும்பவில்லை.

ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன்” என விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: