தசுன் ஷானக அதிரடி : போராடித் தோற்றது இலங்கை!

சுற்றுலா இலங்கை ‘A’ அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளின் முதல் போட்டியில் 02 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பெற்றுக் கொள்ள பங்களாதேஷ் ‘A’ அணிக்கு வாய்ப்புக் கிட்டியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் களத்தடுப்பினை தேர்ந்தெடுத்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியானது 50 ஓவர் முடிவில் 07 விக்கெட்களை இழந்து 280 ஓட்டங்களை பெற்றிருந்தது.
வெற்றி இலக்கு 281 ஐக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘A’ அணியானது 50 ஓவர் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 278 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை சார்பில் தசுன் ஷானக 78 ஓட்டங்களையும் அஷான் பிரியஞ்சித் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
Related posts:
இந்தியன் ஓப்பனிலிருந்து சாய்னா நேவால் விலகல்!
ரோகித் சதம்: இந்தியா ஆதிக்கம்!
மஹிந்தானந்தவிடம் விளையாட்டத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவுக் குழுவினர் விசாரணை - அனைத்து ஆவணங்க...
|
|