தசாப்தங்களின் பின் பாக். டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து!

Wednesday, November 30th, 2016

பாகிஸ்தானுக்கு எதிரான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிக்களுக்கு எதிரான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்றது.

இந்நிலையில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 271 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 216 ஓட்டங்களில் ‘ஆல்அவுட்’ ஆனது.55 ஓட்டங்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டமெடுத்து டிக்ளேர் செய்தது.

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் அசார் அலியும், சமி அஸ்லமும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடிக் கொண்டிருந்த பொழுது, சுழற்பந்து வீரர் சான்ட்னெர் பந்து வீச்சில் அசார் அலி ஆட்டமிழந்தார்.அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்த நிலையில், பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 230 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதனால், நியூசிலாந்து அணி 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி வாய்ப்பை தட்டிச் சென்றது. மேலும், இந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்திய சவுத்தி ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.

255783.3

Related posts: