தகுதி இல்லாதவரா மேத்யூஸ்?
Friday, July 22nd, 2016
இலங்கை அணி சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கூட இலங்கை அணி தோல்வியை சந்தித்து நாடு திரும்பியது. இந்த நிலையில் அனைத்துப் போட்டிகளுக்கும் தலைவராக உள்ள மேத்யூஸை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் மீது விமர்சங்கள் எழுந்து வருகிறது.
ஆனால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் மேத்யூசே தலைவராக தொடர்வார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்தது. இது தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலன் சமரவீரா கூறுகையில், என்னை பொறுத்தவரை இலங்கை அணியின் தலைவரை மாற்றுவது தேவையற்றது.
ஆனால் மேத்யூஸ் சில விடயங்களை கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். போட்டிகளில் சூழ்நிலைகளை நன்கு அறிந்து நடக்க கூடிய சில முடிவுகளை அவர் எடுக்க முன்வர வேண்டும். தலைவர் என்பவர் பெயரளவில் இல்லாமல் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சிறப்பாக செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Related posts:
|
|
|


