ட்ரின்பாகோ அணி வெற்றி!

Monday, July 18th, 2016

கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் நேற்று நடந்த 16வது லீக் ஆட்டத்தில் பொல்லார்ட் தலைமையிலான பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணியும், பிராவோ தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் சேர்த்தது.

தொடக்க வீரர் சோயிப் மாலிக் (47), டிவில்லியர்ஸ்(45) அதிரடி காட்டி ஓட்டங்கள் சேர்த்தனர். அணித்தலைவர் பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 20 பந்தில் 41 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் பின்னர் 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

கொலின் முன்றோ 39 பந்தில் 68 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

பார்படோஸ் அணி வெற்றி பெற்ற போது பிராவோ தனது சாம்பியன் டான்சை ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த வெற்றிகள் மூலம் புள்ளிகள் பட்டியலில் டிரின்பாகோ அணி 3வது இடத்தில் உள்ளது.

Related posts: