டோனி விக்கெட் முக்கியமான விக்கெட்!

Wednesday, July 5th, 2017

இந்திய அணிக்கெதிரான போட்டியின் போது ஜிம்பாப்வே வீரர் கெஸ்ரிக் வில்லியம் ஒரு விக்கெட் எடுத்தாலும் முக்கியமான விக்கெட்டை எடுத்துள்ளார் என்று அந்நாட்டு பயிற்சியாளர் அவரை பாராட்டியுள்ளார்.

இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 11-ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதுகுறித்து ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கூறுகையில், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் டோனி, அவருக்கு எதிராக கெஸ்ரிக் வில்லியம் சிறப்பாக பந்து வீசினார்.

டோனிக்கு 5-ஓவர்கள் வீசிய அவர் குறைந்த அளவிலான ஓட்டங்களே விட்டுக்கொடுத்தார். அவரது ஓவரிலே டோனி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.ஒரு விக்கெட் தான் என்றாலும் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார். பந்து வீச்சில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் இவர் நெருப்பு போன்றவர், ஓய்வறைகளிலும் சிறப்பாக செயல்படுவார்.

மேலும் அவரிடம் சில தந்திரங்கள் உள்ளன, அதை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். ஆட்டத்தின் இடையில் மற்றும் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக பந்து வீசுகிறார் என்று ஸ்டூவர்ட் லா அவரை வெகுவாக பாராட்டினார்.

Related posts: