டோனிக்கு சிக்கல்!

இந்திய கிரிக்கட் அணி தெரிவின் போது, அதன் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி இனி தன்னிச்சையாக அணிக்குள் உள்வாங்கப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய அணித்தேர்வுக் குழுவின் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்தை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அணித்தெரிவின் போது, தகுதி அடிப்படையில் ஏனைய வீரர்கள் தெரிவாகும் அதேநேரம், விராட் கோலி, மகேந்திரசிங் டோனி போன்றவர்கள் தன்னிச்சையாக உள்வாங்கப்பட்டு வந்தனர்
எனினும் டோனியும் எதிர்வரும் காலத்தில் தமது விளையாட்டு திறமையின் அடிப்படையிலேயே அணிக்குள் உள்வாங்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.இது 2019 ஆம் ஆண்டு இடம்பெறும் உலக கிண்ண கிரிக்கட் தொடரில் அவர் பங்கேற்பாரா? என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன எனினும் இந்தவிடயத்தில் திட்டம் ஒன்று இருப்பதாக எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|