டேவிஸ் கோப்பை: உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா !

Tuesday, April 11th, 2017

உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆசிய-ஓசியானியா குரூப்-1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பெங்களூரில் மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இரு நாள்கள் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டங்கள், இரட்டையர் ஆட்டம் ஆகியவற்றில் வெற்றி கண்டபோதே வெற்றியை உறுதி செய்தது இந்தியா. இந்த நிலையில் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் உஸ்பெகிஸ்தானின் சஞ்சார் ஃபெய்ஸியேவை தோற்கடித்தார். 2-ஆவது ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் 5-7, 3-6 என்ற நேர் செட்களில் உஸ்பெகிஸ்தானின் இஸ்மெயிலிடம் தோல்வி கண்டார். இந்திய அணி 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் உலக குரூப் பிளே ஆப் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது. அந்தப் போட்டி வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ளது

Related posts: