டென்னிஸ்: பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி!

Friday, September 22nd, 2017

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் 14ஆம் நிலை வீராங்கனையான கெர்பர் காலிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
ஏஞ்சலிக் கெர்பர் டோக்கியோ நகரில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் ரஷ்யாவின் தாரியா கசட்கினாவை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கெர்பர் ஏழுக்கு ஆறு என்ற கணக்கில் சுற்றை கைப்பற்றினார்.
அதன் பினனரான இரண்டாம் சுற்றில் கடும் போட்டியின் மத்தியிலும் ஆக்ரோஷமாக வினையாடிய கெர்பர் ஆறுக்கு மூன்று என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்

Related posts: