டென்னிஸ்: சாதனை படைத்த ரஷ்ய வீரர்!

Thursday, September 7th, 2017

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 19 வயதே ஆன ரஷ்ய வீரர் ஆந்த்ரே ருப்லெவ் காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் உக்ரைன் வீரர் அலெக்சாண்டர் டோல்கோபோலாவ்வை எதிர்கொண்டார்.

இதில் ரபெல் நடால் 6-2, 6-4, 6-1 என்ற நேர்செட்டில் அலெக்சாண்டரை எளிதில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.இந்த வெற்றியை பெற ரபெல் நடாலுக்கு 1 மணி 41 நிமிடம் தேவைப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் ரபெல் நடால் காலிறுதியை எட்டுவது இதுவே முதல்முறையாகும்.

ரஷியாவை சேர்ந்த 19 வயதான ஆந்த்ரே ருப்லெவ் 7-5, 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட்டில் உலக தர வரிசையில் 14-வது இடத்தில் டேவிட் கோபினை வீழ்த்தி அதிர்ச்சி அளித்து காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.இதன் மூலம் 2001-ம் ஆண்டில் காலிறுதிக்கு முன்னேறிய ஆன்டி ரோட்டிக்குக்கு (அமெரிக்கா) அடுத்தபடியாக குறைந்த வயதில் அமெரிக்க ஓபன் காலிறுதிக்கு தகுதி பெற்ற வீரர் என்ற பெருமையை ஆந்த்ரே ருப்லெவ் பெற்றார். கால்இறுதியில் ஆந்த்ரே ருப்லெவ், ரபெல் நடாலை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: