டிவில்லியர்சின் சாதனையை தகர்தார் விராட் கோஹ்லி!
Tuesday, January 24th, 2017
விராட் கோஹ்லி இந்திய அணியின் தலைவராக வெறும் 17 போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை புரிந்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரரான விராட் கோஹ்லி தற்போது அனைத்து தரப்பு போட்டிகளுக்கும் தலைவராக இருந்து வருகிறார்.
தொடர்ந்து ஆடுகளத்தில் ஜொலித்து வரும் அவர், வெறும் 17 போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் கோஹ்லி தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் டிவில்லியர்ஸ் சாதனையை முறியடித்துள்ளார். டிவில்லியர்ஸ் 18 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதே போல் இங்கிலாந்து அணியின் தலைவர் குக் 21 போட்டிகளிலும், நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்ஸ் 20 போட்டிகளிலும் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தனர்.

Related posts:
கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு!
முக்கோணத் தொடரை வெல்ல காரணம் சொல்லும் தினேஷ் சந்திமால்!
யாருக்கு 2019 ஆண்டக்கான உலகக்கோப்பை?
|
|
|


