டில்ஷான் அதிரடி: ஆப்கானிஸ்தானை வென்றது இலங்கை!

Friday, March 18th, 2016

டி20 உலக கிண்ணத்தில் சூப்பர் 10 ஆட்டத்தில்  6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று (17) நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் துடுப்பெடுத்தாடியது. அதன் ஆரம்ப வீரர்களாக முகமது சாகித் மற்றும் நூர் அலி சாடிரன் களமிறங்கினர். சாகித் 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் அஸ்கார் ஸ்டானிக்ஸாய் நூர் அலியுடன் இணைந்தார். இருவரும் துரிதமாக ஓட்டங்களை குவித்தனர்.

இந்நிலையில் 3 பவுண்டரிகளுடன் 20 ஓவர்களுடன் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நூர் அலி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கரீம் சாதிக். முகமுது நபி ஆகியோர் செற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் அஸ்காருடன் இணைந்த சமியுல்லா சென்வாரி அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். 16.3 ஓவர்களில் 2 சிக்ஸர். 3 பவுண்டரி உட்பட 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சமியுல்லா ஆட்டமிழந்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் அஸ்கார் நிலைத்து நின்று ஆடினார். இந்நிலையில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 62 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அஸ்சரும் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் 153 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை தரப்பில் பெரேரா 3 விக்கெட்டுகளையும் ரங்கன ஹாரத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

154 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. ஆரம்ப வீரர்களாக சந்திமால் மற்றும் தில்ஷான் துடுப்பெடுத்தாடினர். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். இந்நிலையில் 1 சிக்ஸர், 2 பவுண்டரி அடித்து 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சந்திமால் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த திரிமன்னே, பெரேரா, கபுகேத்திரா ஆகியோர் சீரிய இடைவெளையில் ஆட்டமிழந்தார். எனினும் நிலைத்து நின்ற தில்ஷான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இறுதியில் 18.5 பந்துகளில் 155 ஓட்டங்கள் எடுத்து இலங்கை வெற்றி பெற்றது. தில்ஷான் 3 சிக்ஸர், 8 பவுண்டரி உட்பட 83 ஓட்டங்களிலும் மேத்யூஸ் 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் இலங்கை தனது முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: