டில்ஷானின் இடத்திற்கு கார் பந்தய வீரர்!
Tuesday, August 30th, 2016
இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரும் அணித்தலைவருமான திலகரத்ன டில்ஷான் இனது இடத்திற்கு அவுஸ்திரேலிய அணியுடனான போட்டிகளுக்கு சச்சித் பத்திரன உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதுவரை சச்சித் பத்திரன ஒருநாள் போட்டிகள் 3 இல் பங்கேற்றுள்ள வீரர் ஆகும். நாளை நடைபெறவுள்ள இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது போட்டிக்கு சச்சித் பத்திரன பெயர் குறிப்பிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஊடக அமர்வின் போது தெரிவித்திருந்தார்.
இன்று (30) பிற்பகல் தம்புள்ளையில் இடம்பெற்ற ஊடக அமர்வில் ஏஞ்சலோ மேத்யூஸ் மேலும் கூறுகையில், சச்சித் பத்திரன ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அல்ல. ஆனால், டில்ஷான் இற்கு பதிலாகவே அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
சச்சித் பத்திரன கிரிக்கெட் விளையாட்டுக்கு அப்பால் தொழில் முறையில் கார் பந்தய வீரர் ஆவார். நேற்று(29)நடைபெற்ற கஜபா சுப்பர் க்ரோஸ் (Gajaba Super Cross) போட்டியில் சச்சித் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Related posts:
வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது!
சிம்பாப்வே அணி படுதோல்வி !
ரபாடா எந்திரம் அல்ல- அணித்தலைவர் டூபிளிசிஸ் ஆதங்கம்!
|
|
|


