விராட் கோலி படைத்துள்ள சாதனை

Saturday, June 17th, 2017

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்து, இந்திய அணியின் தலைவர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னைய டிவில்லியர்ஸின் சாதனையையும் கோலி முறியடித்துள்ளார்.செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஸ் அணியை இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசினார். இந்த போட்டியில் 96 ஓட்டங்களை எடுத்த விராட் கோலி 8 ஆயிரம் ஓட்டங்களை அதிவேகமாக கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் அவர் 88 ஓட்டங்களை பெற்ற போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.தனது 175 ஆவது இன்னிங்சில் இந்த இலக்கை கடந்த விராட் கோலி இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 8 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

இதற்கு முன்பு தென்னாபிரிக்க அணியின் தலைவர் பி டிவில்லியர்ஸ் 182 இன்னிங்சில் இந்த இலக்கை தொட்டதே சாதனையாக இருந்தது. அதை கோலி முறியடித்து இருக்கிறார்இந்திய தரப்பில் சவுரவ் கங்குலி 200 இன்னிங்சிலும், சச்சின் தெண்டுல்கர் 210 இன்னிங்சிலும், தோனி 241 இன்னிங்சிலும் 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.28 வயதான விராட் கோலி இதுவரை 27 சதங்கள், 42 அரைசதங்கள் உட்பட 8,008 ஓட்டங்களை பெற்றுள்ளார்

Related posts: