ஜேர்மன் வீரர் செபஸ்டியன் வெற்றல் வெற்றி!
Wednesday, March 28th, 2018
2018 ஆம் ஆண்டிற்கான போமியூலா 1 (Formula 1) மகிழுந்து போட்டிகள் சர்வதேச ரீதியாக 21 சுற்றுக்களாக நடத்தப்படுகின்றது. அவுஸ்திரேலிய குரோன் பிரீ (Grand Prix) மெல்போனில் உள்ள ஓடு தளத்தில் முதலாவது சுற்று போட்டி இடம்பெற்றது.
இந்த போட்டியில் நான்கு முறை வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த ஜேர்மன் வீரர் செபஸ்டியன் வெற்றல் (Sebastian Vettel) 1 மணி 29 நிமிடம் மற்றும் 33 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றிபெற்றார்.
307.57 கிலோ மீட்டர் தூர இலக்கை கொண்ட இந்த போட்டியில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்குபற்றினர். அடுத்த மாதம் 8ஆம் திகதி இரண்டாவது சுற்று போட்டி பஹாரேனில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
டெஸ்ட் போட்டி ஒன்றில் வெல்வதே எமது கனவு - டினேஷ் சந்திமால்!
மகளிர் ரி 20 உலக வெற்றிக்கிண்ணத்தை 6 ஆவது முறையாக அவுஸ்திரேலியா கைப்பற்றியது!
வடக்கின் போரை வெற்றிகொண்டது பரியோவான் கல்லூரி!
|
|
|


