ஜிம்பாபே கிரிக்கெட் நிர்வாகிக்கு 20 வருட தடை!
Thursday, March 29th, 2018
கிரிக்கெட் சூதாட்டத்திற்காக ஜிம்பாபே அணித்தலைவரை அணுகிய ஜிம்பாபே கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவருக்கு 20 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாபே நாட்டில் உள்ள ஹராரே மாநகர கிரிக்கெட் சங்க பொருளாளரும், வியாபார இயக்குனருமான ராஜன் நாயர் கடந்த ஆண்டு ஜிம்பாபே அணித்தலைவர் கிரிமரை கிரிக்கெட் சூதாட்டம்செய்வது குறித்து அணுகியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் இது குறித்து ஜிம்பாபே அணித்தலைவர் உடனடியாக தெரிவித்துள்ளார். விசாரணை நடத்தி வந்த ஐ.சி.சி, ராஜன் நாயருக்கு 20 ஆண்டுகள் கிரிக்கெட் தொடர்பானநடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது.
Related posts:
போட்டி நடைபெறும் தினத்தன்று டிக்கட்டுகள் விற்கப்படமாட்டாது!
தர வரிசையில் முன்னிலை வகிக்கும் இலங்கை வீரர்கள்!
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் மாலிங்க!
|
|
|


