ஜாம்பவான்களை உருவாக்கிய அணிக்கு இந்த நிலையா? – சவுரவ் கங்கலி!
Saturday, September 29th, 2018
ஆசியக் கிண்ண தொடரில் இலங்கை அணி மோசமாக விளையாடியது கிரிக்கெட் போட்டிக்கு நல்லதல்ல என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
நேற்று நடந்து முடிந்த ஆசியக்கிண்ண இறுதி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
இத்தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளின் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்ததால் இரு அணிகளும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
இது குறித்து பிரபல பத்திரிக்கையில் கட்டுரை எழுதியுள்ளார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கங்குலி.
அதில், ஆசியக் கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடியது கிரிக்கெட் போட்டிகளுக்கு நல்லதல்ல. ஏனெனில் இரு அணிகளும் பல ஜாம்பவான்களை முன்னர் உருவாக்கியவர்கள்.
ஆசியாவின் மிகபெரிய அணிகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானின் மோசமான செயல்பாடுகள் கவலையளிக்கூடிய விடயமாக உள்ளது என எழுதியுள்ளார்
Related posts:
23 ஆண்டுகளுக்கு பின்னர் உலக சாதனை முறியடிப்பு!
திலக்கரட்ன தில்ஷானின் அடுத்த அவதாரம்!
வடமாகாண கரபந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சையும் கருத்தரங்கும்!
|
|
|


