ஜமைக்காவிலிருந்து மற்றுமொரு புதிய புயல்!

அண்மைய காலங்களில் குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் ஜமைக்காவே ஆதிக்கம் செலுத்துகையில் ஜமைக்காவிலிருந்து புதிய வீரர் ஒரவர் தனது வருகையை அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஜமைக்காவைச் சேர்ந்த ஒமர் மக்கிலியோட், 110 மீற்றர் தடைதாண்டலில் தங்கம் வென்றதன் மூலமே தனது வருகையை உலகுக்கு அறிவித்துள்ளார். போட்டித் தூரத்தை 13.05 செக்கன்களில் கடந்தே அவர் தங்கம் வென்றார்.
13.17 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த ஸ்பெயினின் ஒர்லாண்டோ ஒர்ட்டீகா வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், 13.24 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த பிரான்ஸின் திமித்திரி பஷோக்கு வெண்கலப் பதக்கம் வென்றார்
Related posts:
அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்கா பயணம்!
சுரங்க லக்மாலுக்கு மீண்டும் அழைப்பு!
இரண்டாவது இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித் - தடுமாறும் இங்கிலாந்து!
|
|