ஜப்பான் கராத்தே அக்கடமித் தொடர்: இலங்கை வீரர்களுக்கு அதிக பதக்கங்கள்!

ஜப்பானின் கராத்தே அக்கடமியின் இலங்கைக்கான சங்கம் நடத்திய கராத்தே தொடரில் சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்ரநஷனல் சிறிலங்கா கழகத்தின் சார்பாக களமிறங்கிய வீரர்கள் பலர் பதக்கங்களை கைப்பற்றினர். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா, ஜப்பான், இலங்கை நாடுகளைச் சேர்ந்த பல வீரர்கள் கலந்துகொண்டனர்.
சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்ரநஷனல் சிறிலங்கா கழகத்தின் சார்பாக களமிறங்கிய ஆத்தேஷா கனிஷ்ட பிரிவினருக்கான காட்டாப் போட்டியில் தங்க பதக்கத்தையும், சிரேஷ்ட பிரிவினருக்கான காட்டாப் போட்டியில் கபில்தேவ் மற்றும் சிந்துஜன் வெள்ளிப் பதக்கங்களையும், இதே பிரிவில் இக்லாஸ் மொகமட் வெண்கல பதக்கத்தையும், கனிஷ்ட பிரிவினருக்கான குமித்தேப் போட்டியில் அமித்தேஷா வெள்ளி பதக்கத்தையும், மூத்த பிரிவினருக்கான குமித்தேப் போட்டியில் றிஸ்கி மொகமட், கபில்தேவ் இருவருக்கும் வெள்ளிப் பதக்கமும், யூடின் சிந்துஜன், இந்திரகுமார் இருவரும் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
Related posts:
|
|