குமார் சங்ககாரா முதலிடம்!

Friday, August 2nd, 2019

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆசிய அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர்களில் அதிக துடுப்பாட்ட வீரர்களை அவுட்டாக்கியவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகள் ஆசியாவை சேர்ந்த அணிகளாக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்று வருகின்றன.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆசிய அணிகளை சேர்ந்த விக்கெட் கீப்பர்களில் அதிக துடுப்பாட்ட வீரர்ககளை அவுட்டாக்கியவர்களின் பட்டியலில் இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா முதலிடத்தில் உள்ளார்.

அவர் 482 பேரை விக்கெட் கீப்பராக இருந்து அவுட்டாக்கியுள்ளார். இப்பட்டியலில் இந்தியாவின் டோனி 444 பேரை அவுட்டாக்கி இரண்டாமிடத்தில் உள்ளார்.

பட்டியலில் உள்ள முதல் 6 பேரில் குமார் சங்ககாரா 482  ஆட்டமிழப்புக்களையும்

டோனி 444 – ஆட்டமிழப்புக்களையும்

பாகிஸ்தான் வீரர் மொய்ன் கான் 287 – ஆட்டமிழப்புக்களையும்

பங்களாதேஸ் வீரரான முஸ்பிகுர் ரகுமான் 222 – ஆட்டமிழப்புக்களையும்

மற்றுமொரு பாகிஸ்தான் வீரரான ரசித் லதீப் 220 ஆட்டமிழப்புக்களையும்

இலங்கை வீரரான ரமேஷ் கலுவலிதரனா 206 ஆட்டமிழப்புக்களையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: