சென். மேரிஸ் கழகம் அரையிறுதிக்குத் தகுதி!
Thursday, May 10th, 2018
தெல்லிப்பழை நாமகள் சனசமூக நிலையத்தின் 55 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக் கழகம் நடத்தும் அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் கால்பந்தாட்டத் தொடரில் நாவாந்துறை சென். மேரிஸ் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
நாமகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்தக் காலிறுதியாட்டத்தில் நாவாந்துறை சென். மேரிஸ் அணியை எதிர்த்து குப்பிளான் குறிஞ்சிக்குமரன் அணி மோதியது. முதல் பாதியின் முடிவில் இரண்டு அணிகளும் கோல்கள் எதையும் பதிவுசெய்யவில்லை.
இரண்டாவது பாதியில் சென். மேரிஸ் அணியின் கோலைப் பதிவுசெய்தார் தங்கன். முடிவில் 1:0 என்ற கோல் கணக்கில் சென். மேரிஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
Related posts:
ஜூன் மாதம் முதலாம் திகதிமுதல் விளையாட்டுத் துறை நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை – கல்வி அமைசச்சர் ட...
இறுதிப் போட்டியில் இந்தியா பிரவேசிப்பதற்கு உதவிய நியூசிலாந்துக்கு நன்றி தெரிவித்த ராகுல் டிராவிட்!
உலக கால்பந்து தொடரில் புதிய தீர்மானம் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
|
|
|


