சுழல் பந்தை எதிர்கொள்ள அஸ்வின், ஜடேஜா வீடியோவை பார்த்து வருகிறோம்: உஸ்மான் கவாஜா!

Monday, February 13th, 2017
இந்திய தொடரில் சுழலைச் சமாளிக்க அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பந்து வீச்சு வீடியோவை பார்த்துவருவதாக கவாஜா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா கடந்த 2013-ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின் போது அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் பயிற்சியில் ஈடுபடாதது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 வீரர்களில் இவரும் இடம் பெற்றார்.
இதனால் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை அப்போது அவர் இழந்திருந்தார். இந்நிலையில் இந்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளேன். இது இம்முறை நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் எனது சிறந்த ஆட்டத்தை தீர்மானிப்பாக இருக்கும் என கவாஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
2013-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய டெஸ்ட் தொடர் கடினமாக அமைந்தது. நாங்கள் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்திருந்தோம். நாங்கள் நினைத்தபடி எங்கள் வழியில் எதுவும் நடைபெறவில்லை. தற்போது நாங்கள் மாறுபட்ட அணியாக உள்ளோம்.

அனுபவங்கள் தான் சிறந்த விக்கெட் வீரராகவும் மனிதராகவும் நம்மை வடிவமைத்துக்கொள்ள உதவும். நாம் சிறப்பாக செயல்படாத சமயங்களிலும், அணி சிறப்பாக செயல்படாத நிலையிலும் இருந்துதான் பாடங்களை கற்றுக்கொள்கிறோம். சிறந்த அணிக்கு எதிராகவும், வீரர்களுக்கு எதிராகவும், பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் விளையாடுவது என்பது எனக்கு எப்போதுமே உற்சாகமாக இருக்கும். சிறந்த வீரர்களுக்கு எதிராக சவாலுடன் எப்படி விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியம்.

எல்லோரும் வித்தியாசாக தங்களது வழிகளில் செயல்படுகின்றனர். அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பந்து வீச்சு வீடியோவை எல்லோரும் பார்வையிட்டுள்ளோம். இதில் ஒரு சில வீரர்கள் அதிகமுறை வீடியோவை பார்க்கின்றனர். ஒரு சில வீரர்கள் குறைவாக பார்வையிடுகின்றனர். கிரிக்கெட் என்பது நவீன விளையாட்டு. இப்போது எல்லோருக்கும் எல்லாம் தெரிகிறது. இது ஆட்டத்தின் ஒரு அங்கமே. இவ்வாறு உஸ்மான் கவாஜா கூறியுள்ளார்.
201604300007265904_Pune-squadUsman-kavaja-Affiliation_SECVPF

Related posts: