சிட்னி சர்வதேச டென்னிஸ் - வொஸ்னியாக்கி வெற்றி!
Wednesday, January 11th, 2017
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னாள் முதல்தர வீராங்கனை கரோலின் வொஸ்னியாக்கி மோனிகா புய்க்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் முதனிலை வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சம்பியன் மோனிகா புய்க்கை (புயர்டோரிகா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் சிபுல்கோவா (சுலோவக்கியா) 6-2, 6-0 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் லாராவை எளிதில் தோற்கடித்த அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

Related posts:
கிரிக்கெற் அணியை கேவலப்படுத்திவிட்டனர் - சனத் ஜயசூரிய ஆவேசம்!
இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் பதிவு இரத்து!
பண்டத்தரிப்பு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் விவகாரம் - வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் வெளிப்படுத...
|
|
|


