சாவாலை எதிர்கொள்ளுமா இலங்கை!
Saturday, January 28th, 2017
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டி தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் இடம்பெறவுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க அணிக்கு தலைமை ஏற்றுள்ள நிலையில், தென்னாபிரிக்க அணி சார்பில் டிவில்லியர்ஸ் அணித்தலைமையை ஏற்றுள்ளார்.
இலங்கை சார்பில் களமிறங்கும் அணி இளம் வீரர்களை கொண்டதாக அமைந்துள்ளதுடன், தென்னாபிரிக்கா சார்பில் களமிறங்கும் அணி சிறந்த அனுபவ வீரர்களுடன் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தன் பெயரையே மறந்த பிரபல கிரிக்கெட் நட்சத்திரம்!
தொடரை வென்றது இந்தியா அணி!
கொரோனா தாக்குதல் அச்சம்: ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு!
|
|
|


