சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜேர்மன் வீரர்!

Tuesday, November 20th, 2018

லண்டனில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி ஜேர்மன் வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

டாப் 8 வீரர்கள் பங்கேற்ற ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் நடந்தது. இந்தப் போட்டியில் செர்பியாவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்(31), ஜேர்மனியின் இளம் வீரரான அலெக்சாண்டர் சுவேரேவ்வை(21) எதிர்கொண்டார்.

இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். எனினும் துடிப்புடன் செயல்பட்ட சுவேரேவ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

கடந்த 37 போட்டிகளில் 35 வெற்றிகளைப் பெற்றிருந்த ஜோகோவிச்சுக்கு இது அதிர்ச்சி தோல்வியாகும். எனினும், அவர் சுவேரேவ்வை பாராட்டினார்.

இந்த வெற்றியின் மூலம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சுவேரேவிற்கு 2 மில்லியன் யூரோக்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

Related posts: