சாதனை படைத்த சீகுகே பிரசன்னா!

Friday, June 24th, 2016

இங்கிலாந்து – இலங்கை அணிகளிடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில், லியாம் பிளங்கெட் கடைசி பந்தில் சிக்சர் விளாசியதால் ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் (டை) முடிந்தது.

வெற்றிப்பெற்றிருக்க வேண்டிய நிலையில் இருந்த இலங்கை அணிக்கு இது அதிர்ச்சியை கொடுத்தது, இருப்பினும் இலங்கை அணியின் புதிய அதிரடி ஆட்டக்காரர் சீகுகே பிரசன்னா சில சாதனைகளை இந்த போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் 59 ஓட்டங்கள் பிரசன்னா எடுத்ததில் முதலில் 2 சிங்கிள்கள், அதன் பிறகு 56 ஓட்டங்களை பவுண்டரி, சிக்சர்கள் மூலமே எடுத்தார், அதாவது 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களை விளாசினார்.இரண்டு தொடர்ச்சியான ஒருநாள் போட்டிகளில் இரண்டு அரைசதங்களை 200 ஸ்ட்ரைக் ரேட்டில் பிரசன்னா எடுத்ததும் ஒரு சாதனையாகும்.

அயர்லாந்துக்கு எதிரான 95 ஓட்டங்களின் போது ஸ்ட்ரைக் ரேட் 206.52. நேற்று இங்கிலாந்துக்கு எதிராக ஸ்ட்ரைக் ரேட் 210.71. இதேபோன்று அரைசதங்களில் அடுத்தடுத்து 200 ஓட்டங்களுக்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தவர்கள் எல்டன் சிகும்பரா, மற்றும் பிரெண்டன் மெக்கல்லம், தற்போது சீகுகே பிரசன்னா.

இங்கிலாந்துக்கு எதிராக 200 ஓட்டங்களுக்கும் மேலாக ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ஸ்கோர் அடித்த முதல் வீரர் சீகுகே பிரசன்னா.இந்த இரண்டு போட்டிகளிலும் சீகுகே பிரசன்னாவின் ஸ்ட்ரைக் ரேட் 80.75-லிருந்து 111 ஆக அதிகரித்துள்ளது.

Related posts: