சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் அதிகளவில் இலங்கையர் பங்கெடுப்பு!

சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகள் பலவற்றில் இந்த வருடத்தில் இலங்கையைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்ற இருப்பதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் சுகத் திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ராஞ்சியில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியிலும் தாய்லாந்தில் பாங்கொக்கில் இடம்பெறவுள்ள ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி, பஹமாஸில் நடைபெறவுள்ள பொதுநலவாய ஒன்றிய விளையாட்டுப் போட்டியிலும் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலண்டனில் நடைபெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் போட்டியிலும் மாலைதீவில் இடம்பெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியிலும் இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுக் குழு கலந்து கொள்ள இருப்பதாகவும் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் சுகத் திலகரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கட் அணி?
டு பிளசிஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை – ஐசிசி!
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் உள்ளடக்கம்.!
|
|