சர்வதேச கிரிக்கட் பேரவையின் முக்கிய பதவிக்கு குமார் சங்கக்காரவை பரிந்துரைப்பது குறித்து ஆலோசனை!
Sunday, May 10th, 2020
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவை, சர்வதேச கிரிக்கட் பேரவையின் முக்கிய பதவி ஒன்றுக்கு பரிந்துரைப்பது குறித்து இலங்கை கிரிக்கட் ஆலோசித்து வருகிறது.
இலங்கை கிரிக்கட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா இதனை சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்
குமார் சங்கக்கார தற்போது இங்கிலாந்தின் எம்.சீ.சி. கிரிக்கட் கழகத்தின் தலைவராக உள்ளார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்தப் பின்னர் அவரது முதிர்ச்சியை இலங்கை கிரிக்கட் பெற்றுக் கொள்ள முயற்சி எடுப்பதுடன், அவரை சர்வதேச கிரிக்கட் பேரவையின் முக்கிய பதவி ஒன்றுக்கு பரிந்துரைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீராங்கனையின் பதக்கம் பறிப்பு!
அவுஸ்திரேலிய அணி வீரர்கள் மீது தாக்கதல்!
கிடைத்த ஆடுகளம் சிறந்தது அல்ல – மத்தியூஸ் கவலை!
|
|
|


