சர்ச்சைக்குள்ளான பாகிஸ்தான் அணித்தலைவர்!

Saturday, June 1st, 2019

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடக்க விழாவில், பிரித்தானிய ராணியின் முன்பு பாகிஸ்தான் அணித்தலைவர் அணிந்து வந்த உடை பெரிய விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் துவக்க விழா லண்டனில் நேற்று நடைபெற்றது. மிகவும் எளிமையான முறையில் நடந்த இந்த விழாவில், பிரித்தானிய மகாராணி எலிசபெத் கலந்துகொண்டார்.

பக்கிங்ஹாம் பேலஸில் உள்ள மாலில் இவ்விழா நடைபெற்றது. இதில் தொடரில் கலந்துகொள்ளும் 10 அணிகளின் தலைவர்களும் கோட் சூட் உடையில் ராணி எலிசபெத்தை சந்தித்தனர்.

அதன் பின்னர் அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். ஆனால், பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்ராஸ் அகமது அணிந்து வந்த உடை தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம், அவர் மட்டும் பாகிஸ்தானின் பாரம்பரிய உடையான பைஜாமா அணிந்து, அதன் மேல் கோட் அணிந்திருந்தார். எல்லா நாட்டு அணித்தலைவர்களும் கோட் சூட்டில் வந்திருக்கும்போது, இவர் மட்டும் ஏன் இப்படி உடை அணிந்தார்? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிலர் அவரது உடையை கிண்டல் செய்த நிலையில், சிலர் அவர்கள் நாட்டின் பாரம்பரிய உடையை தான் உடுத்தி இருக்கிறார் என்று ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related posts: